அம்பாறை மாவட்ட விபுலானந்த புணர்வாழ்வு அமைப்பினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு

(அம்பாறை மாவட்ட பிராந்திய நிருபர் றாசிக் நபாயிஸ்)
அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு அமைப்பு ஏற்பாடு செய்த பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22.04.2020) மத்திய முகாம் பிரதேசத்தில் இடம் பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விபுலானந்த புனர்வாழ்வு அமைப்பின் முக்கியஸ்தர்கள், கிராம மட்டங்களில் கடமையாற்றும் கிரம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இவர்களுக்கு மேலதிகமாக கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கான உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள 300 தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்களுக்கு விபுலானந்த புனர்வாழ்வு அமைப்புபின் உறுப்பினர்களால் இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வின்போது சமூக இடைவெளி பேணப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறும் உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு அறிவவுறுத்தல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Similar Videos