கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தொற்றுநீங்கி தெளி கருவிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

(அம்பாறை மாவட்ட பிராந்திய
நிருபர் றாசிக் நபாயிஸ்)

Covid- 19 கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளுக்கு தொற்று நீங்கி தெளி கருவிகள் மற்றும் ஒலி பெருக்கி என்பன அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று  மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை தெற்கு , சாய்ந்தமருது, காரைதீவு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவகங்களுக்கு இந்த இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாசளர் பொறியியலாளர் யு.கே.எம்.முஸாஜத், நிருவாக பணிப்பாளர் யு.எல்.எம்.பைஸர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் .என்.ஆரிப், உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Similar Videos