மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு மாநகர முதல்வரின் எச்சரிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும்போது வழங்கப்படும் அறிவுரைகளை மீறும் வர்த்தக நிலையங்களின் அனுமதிகள் ரத்துச்செய்யப்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தினை நாளை காலை 06.00மணி தொடக்கம் இரவு 8.00மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்துவதற்கான அறிவிப்பினை அரசாங்கம் விடுத்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் குறித்தும் அரசாங்கம் சில பணிப்புரைகளை விடுத்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் மாநகரசபையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு வர்த்தக சங்க பிரதிநிதிகள்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன்,மட்;டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல்,பிரதி ஆணையாளர் சிவராஜா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,மாநகரசபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கொரனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்கவும் அதற்கு தேவையான மாநகரசபையின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்படும்போது சில நடைமுறைகளை வர்த்தக நிலையங்கள் நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் என தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,அதனை மீறும் வர்த்தக நிலையங்களின் அனுமதி நிறுத்தப்படும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது உணவகங்கள்  சிற்றூண்டிச்சாலைகள்,  அழகுசாதன நிலையம் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வியாபார நிலையங்களையும் 20.04.2020 அன்று ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் திறப்பதற்கு கீழ்வரும் நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழக்குவது என் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1. வாடிக்கையாளர்களை கட்டாயம் 1அ தூர இடைவெளியில் பேணுவது, அதற்குரிய வகையில் அமைப்பு மற்றும் குறியீடுகளை ஏற்படுத்துதல்.

2. வாடிக்கையாளர்கள் கைகழுவுவதற்கு சவர்க்காரம் மற்றும் தண்ணீர் வசதி அல்லது கைகளை ளுயnவைணைநச  மூலம் சுத்தப்படுத்துவதற்கான வசதியை வழங்குவது.

3. வர்த்தக நிலைய சகல பணியாளர்களும் அவசியம் முகக்கவசம் அணிந்திருப்பது, மிகக்குறைந்த தேவையான பணியாளர்களை மாத்திரம் பணிக்கு அமர்த்துவது.

4. இருமல், தடுமல், காய்ச்சல், சுவாசப்பிரச்சினை உள்ளவர்களை பணிக்கு அமர்த்தாதிருப்பது.

5. தேவையற்றவகையில் வாடிக்கையாளர் வர்த்தக நிலையத்தின் பொருட்கள் மற்றும் மேற்பரப்புக்களை தொடுவதை தவிர்பதற்கான அறிவுறுத்தலை வழங்குதல்.

6. வர்த்தக நிலையத்தின் சகல பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுநோய் தவிர்ப்பதற்காக ஆலோசனைகளையும், முகக்கவசம் ளுயnவைணைநச ஆகியவற்றைப் தேவையான அளவு பெற்றுக் கொடுத்தல்.

7. வியாபார நிலையத்தின்  மேற்பரப்புக்கள், தரைகள், கதவுகள், சுவர்கள், ளுறவைஉh கைபிடி மற்றும் அடிக்கடி  கைகளால் தொடும் இடங்களை கிருமி நீக்கி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தல்.

8. வியாபார நிறுவனங்களின் இடப்பரப்புக்கேற்ப ஆகக்கூடியது 3-5 நுகர்வோர்களை மாத்திரம் ஒரே நேரத்தில் அனுமதிப்பது.

9. வர்த்தக நிலையத்தினுள் குளிரூட்டிகளை நிறுத்தி சூரிய வெளிச்சம், காற்று உட்புகக் கூடியவாறு வைத்திருத்தல்.

10. கொரோனா தொற்றுநோயை தவிர்க்கக்கூடிய வகையில் செய்திகளைக் கொண்ட பதாதைகளை காட்சிப்படுத்தல்.

Similar Videos