வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் பிள்ளையான் - படகு சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிடுவதற்காக சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் சி.சந்திகாந்தன் வேட்பு மனுவில் கையொப்பம் இடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைவாக சந்திகாந்தன் தேர்தலில்போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
சிறைச்சாலையில் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பெற்றோர் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றம் கட்சியின் முக்கிஸ்தர்கள் முன்னிலையில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தினை நேசிப்போரையும் அதனோடினைந்த சமூக அமைப்புகள்,கட்சிகளை ஒருங்கிணைத்த வகையில் கிழக்கு மக்களின் பாரிய சுமையினை இன்று தமது கட்சி சுமந்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
நாளை மறுதினம்(புதன்கிழமை)வேட்பு மனுத்தாக்கதல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.Similar Videos